"என்னோட பேட்டுதான் பேசும்"...வைரலாகும் கோலியின் செஞ்சுரி ஸ்பெஷல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 26, 2018 10:53 PM
Let the Bat do the Talking virat Kohli celebrating of his ODI 100

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நேற்று முன்தினம்  நடந்த ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 37-வது சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். அதோடு,தனது 205-வது இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார் விராட் கோலி.

 

இதன்மூலம் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற,மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்தார்.இதன்முலம் உலகிலேயே அதிவேகத்தில் 10 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

 

போட்டியின் போது சதம் அடித்ததும் ‘என்னுடைய பேட்-தான் பேசும்’ என்பதை உணர்த்தும் விதமாக அவர் சைகை செய்து சதத்தை கொண்டாடினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.