அனைத்து 'சர்வதேசப் போட்டிகளிலும்' இருந்து ஓய்வு பெறுகிறேன்: சிஎஸ்கே வீரர் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 25, 2018 03:15 PM
West Indies Dwayne Bravo retires from International Cricket

அனைத்து சர்வதேசப் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுகிறேன் என, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.

 

கடந்த 2004-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான பிராவோ தொடர்ந்து 15 வருடங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். இதுகுறித்து பிராவோ கூறுகையில்,'' நான் கிரிக்கெட் விளையாட அறிமுகமான நாள் இன்றும் எனக்கு நினைவில் உள்ளது.

 

ஒரு கிரிக்கெட் வீரனாக அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிட வேண்டும். அதனால் எனது இடத்தில இருந்து விலகி ஓய்வு பெறுகிறேன். கிரிக்கெட் மீதான எனது உணர்வு, உற்சாகம் எப்போதுமே இருக்கும்,'' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

 

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, கடந்த பல ஆண்டுகளாக பிராவோ விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #CSK #CHENNAI-SUPER-KINGS #IPL #DWAYNEBRAVO