10,000 ரன்கள்.. அதிவேக சாதனை.. அசத்திய விராட் கோலி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 24, 2018 06:46 PM
aptain Virat Kohli becomes the fastest player to score 10,000 ODI runs

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் விளையாண்ட இந்திய அணி 322 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 157 ரன்கள் எடுத்து விளாசியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

 

இதன் மூலம் 205 ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்னிங்ஸில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த ஐந்தாவது கிரிக்கெட் வீரர் என்று இந்திய அளவிலும் மற்றும் 13-வது வீரர்  என்று உலக அளவிலும் புகழை அடைகிறார். 

 

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சினை விடவும் 54 இன்னிங்ஸ் அட்வான்ஸாகவே இந்த ஸ்கோரினை விராட் கோலி தற்போது தொட்டுள்ளார். அதாவது இதே ரன் ரேட்டிங்கை சச்சின் தொடுவதற்கு 259 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. இதனால் மிக வேகமாக அதிக ரன்களைக் குவித்துள்ள வீரர்களின் முக்கியமான பட்டியலில் இடன் பெறுகிறார் விராட் கோலி.

Tags : #VIRATKOHLI #ODI #CRICKET #WI #INDIA #INDVSWI #CAPTAIN #SACHINTENDULKAR