ஐபிஎல்2019: 6 மாதங்களுக்கு முன்பே சூடுபிடித்த ஆட்டம்.. அணிமாறும் நட்சத்திர வீரர்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 23, 2018 05:20 PM
IPL2019: Shikar Dhawan keen to leaves Sunrisers Hyderabad

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே வீரர்களை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

 

சமீபத்தில் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கினை ஏலத்தில் எடுத்த தொகைக்கே(2.80 கோடி) ராயல் சேலஞ்சர்ஸ் அணி, மும்பை அணிக்கு விற்றது.

 

இந்தநிலையில் அடுத்ததாக சன்ரைசர்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனும் அந்த அணியின் நட்சத்திர வீரருமான ஷிகர் தவானும் விரைவில் அணி மாறவுள்ளதாக கூறப்படுகிறது. அவரை ஏலத்தில் எடுக்க மும்பை அணியின் கேப்டன் ரோஹித் தீவிர ஆர்வம் காட்டுகிறார். அதே நேரம் பஞ்சாப் அணி தங்கள் அணியில் உள்ள கருண் நாயரை ஹைதராபாத் அணிக்கு கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக ஷிகர் தவானை தங்கள் அணியில் எடுப்பதற்கு தீவிர ஆர்வம் காட்டி வருகிறதாம்.

 

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி கோவாவில் நடைபெறும் என தெரிகிறது. எனினும் அதற்கு முன்பாகவே வீரர்கள் அணிமாறத் தொடங்கியுள்ளதால் 12-வது ஐபிஎல் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.