'தல தோனி' பிளான் சொதப்பியதால் தான் போட்டி 'டை'யில் முடிந்தது

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 26, 2018 03:02 PM
How MS Dhoni plans worked in West Indies favour as 2nd ODI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி 'டை'யில் முடிய தோனியின் பிளான் தான் காரணம் என, பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்திருக்கிறார்.

 

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணி மோதிய 2-வது ஒருநாள் போட்டி கடைசிப்பந்து வரை நீண்டது. இதில் கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். கடைசிப்பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருந்தது.

 

இதனால் கடைசிப்பந்துக்கு முன் இந்திய அணியின் பீல்டிங் மாற்றப்பட்டது. குறிப்பாக கடைசி பந்தை உமேஷ் வைடு யார்க்கராக மாற்றினார். எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் கோப் அந்த பந்தினை பவுண்டரி அடித்து போட்டியை வெற்றி-தோல்வியின்றி முடித்து வைத்தார். அந்த கடைசிப்பந்து தான் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறித்தது.

 

போட்டிக்குப்பின் பேட்டியளித்த குல்தீப்,'' நான் வெறும் 30 போட்டிகள் ஆடி இருக்கிறேன். ஆனால் மஹி பாய் 300 போட்டிகள் ஆடியிருக்கிறார். அவர் அனுபவம் வாய்ந்தவர். அந்த நேரத்தில் தோனி அதனை யோசித்து செயல்படுத்தினார்,'' என்றார்.

 

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் கோப் கூறுகையில்,'' எனக்கு அந்த பந்து வைடு யார்க்கராக வரும் என தெரியும். இன்னும் சற்று தூக்கி அடித்திருந்தால் பந்து சிக்சருக்கு சென்று எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும். எனினும் ஆட்டத்தை நாங்கள் இழக்காதது சந்தோஷமே,'' என தெரிவித்துள்ளார்.

Tags : #MSDHONI #VIRATKOHLI #CRICKET ##INDVSWI