உடன் படிக்கும் 15-20 பேரை கொல்ல முயன்ற 2 பள்ளி மாணவிகள்: மிரள வைக்கும் காரணம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 26, 2018 03:00 PM
School girls arrested for planning to kill 15 students here is why

அமெரிக்காவுக்கு உட்பட்ட செண்ட்ரல் புளோரிடாவில் உள்ளது போர்ட்டான் பள்ளி. இந்த மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு மட்டும் 12-ம் வகுப்பு படிக்கும் இரண்டு பெண்கள் சேர்ந்து தங்கள் பள்ளியில் படிக்கும் சக மற்றும் கீழ்வகுப்பில் பயிலும் மாணவர்களை கொல்லும் திட்டத்தில் இருந்துள்ளனர் என்பது தெரிய வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

மேலும் இந்த இரு பெண்களின் வீடு மற்றும் பள்ளி பைக்குள் கத்தி, பழங்காலத்தில் பானங்கள் ஊற்றிக்குடிக்கும் கிளாஸ், சில கடிதங்கள் இருந்துள்ளன. அவற்றில் இருந்து கிடைத்ததோ அதிர்ச்சியான மிரள வைக்கும் தகவல்கள்.

 

கிட்டத்திட்ட 15 முதல் 20 பேரை கொல்வதற்கு திட்டம் போட்ட இந்த பெண்கள் தங்கள் நோட்டு புத்தகங்களில் பாத்ரூமில் வைத்து கொல்ல வேண்டும் என்றும் கொன்றுவிட்டு அவர்களின் ரத்தத்தை அந்த கிளாஸில் ஊற்றி பருகிவிட்டால், நரகத்துக்கு சென்று நித்தியத்துவம் அடைந்துவிடலாம் என்கிற யோசனையில் இருந்துள்ளனர். மேலும் அந்த பெண்கள் தாங்கள் இருவரும் சாத்தானின் அடிமைகள் என நினைத்துக்கொண்டு எல்லாம் முடிந்தபின் தங்களைத் தாங்களே கொன்றுக் கொள்ளும் யோசனையிலும் இருந்துள்ளதாக போலீசார் தகவல்கள் அளித்துள்ளனர். 

 

இந்த பெண்கள் இருவரும் மனநலம் ரீதியாக குணமாக வேண்டியவர்கள் என்பதால் இவர்கள் இருவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. 

Tags : #SCHOOLSTUDENT #SATAN #BORTANSCHOOLGIRLS #EVIL #TWOGIRLS #US