'வாழைப்பழம், ரெயில் பயணம், மனைவி,கேர்ள் பிரெண்ட்'.. எல்லாமே வேணும்; கோலி அடம்

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 30, 2018 08:27 PM
A reserved rail coach, Fruits Virat Kohli demands for World Cup 2019

2019-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு முன்பதிவு செய்யப்பட்ட ரெயில், வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வேண்டும் என கோலி அடம் பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

உலகக்கோப்பை போட்டி வருகின்ற 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

 

இந்தநிலையில் இங்கிலாந்து சென்று விளையாடும் தங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என, கோலி தேர்வுக்குழுவினரிடம் அடம் பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இங்கிலாந்து சென்று தாங்கள் விளையாடும்போது பல்வேறு நகரங்களுக்கு சென்று விளையாட வேண்டி இருக்கும். அப்போது தாங்கள் ரெயிலில் செல்வதற்கு முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் வேண்டும். தொடர் முழுவதும் வீரர்களின் மனைவி, காதலி ஆகியோர் தங்களுடன் வந்து தங்குவதற்கு அனுமதி வேண்டும்.

 

போட்டியின்போது பெரும்பாலும் அங்கு கொடுக்கப்படும் உணவுகளையே சாப்பிட வேண்டி உள்ளது. இதற்கு மாற்றாக வாழைப்பழம் போன்ற பழங்கள் வேண்டும். வாழைப்பழம் வீரர்களுக்கு உடனடியாக புத்துணர்ச்சியைத் தரும். இவ்வாறு கோலி தேர்வுக்குழுவினரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : #VIRATKOHLI #MSDHONI #WORLDCUP2019