'என்னைக் கிண்டல் செய்கிறார்கள்'.. பேட்டிங்கை பாதியிலேயே விட்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய வீரர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 27, 2018 09:57 PM
David Warner leaves field after cricket sledge in Sydney

தன்னைக் கிண்டல் செய்கிறார்கள் என பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மைதானத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் ஒரு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து டேவிட் வார்னர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இன்று சிட்னியில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் டேவிட் வார்னர் விளையாடினார்.

 

அவர் 35 ரன்களில் இருந்தபோது எதிரணியினர் தன்னைக் கேலி செய்வதாக நடுவரிடம் கூறிவிட்டு, மைதானத்தை விட்டு வெளியேறினார்.இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் இதுபோல ஏற்படாது என சக வீரர்கள் கூறியதைத் தொடர்ந்து, வார்னர் மீண்டும் விளையாட வந்தார்.தொடர்ந்து அந்த போட்டியில் வார்னர் சதமடித்து அசத்தினார்.