உலகக்கோப்பை போட்டிகளில் இவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்:விராட் கோலி உறுதி!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 31, 2018 10:49 AM
Virat Kohli needs MS Dhoni for 2019 World Cup

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை போட்டிகளின் அட்டவணையை வெளியிட்டது ஐசிசி.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அடுத்த ஆண்டு (2019) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இத்தொடர் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

 

இந்நிலையில் உலகக்கோப்பை போட்டிகளில் தோனியின் அனுபவம் நிச்சயம் உதவும்.எனவே அவர் அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என கோலி தெரிவித்ததாக,முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,அணியின் சீனியர் வீரருமான தோனியின் மோசமான பேட்டிங் பார்ம், பினிஷிங் திறமை போன்றவை தற்போது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.இதனால் தோனி விரைவில் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது.இந்நிலையில் கோலியின் இந்த கருத்து முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

 

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர் "வரும் 2019 உலகக்கோப்பையில் தோனியின் அனுபவம் கோலிக்கு நிச்சயமாக உதவும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பீல்டிங் மாற்றங்களுக்கு உதவுவது, எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு புரியாமல் ஹிந்தியில் பவுலர்களுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட விஷயங்கள் கோலிக்கு நிச்சயமாக மிகப்பெரிய பிளஸ்.’  என்று கூறினார்.

Tags : #VIRATKOHLI #MSDHONI #CRICKET #WORLD CUP 2019