காவல் நிலையத்துக்கு எதிரிலேயே நகைக்கடையில் நிகழ்ந்த சம்பவம்: வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 31, 2018 06:33 PM
Chain Robbery in Chennai Jewelry shop CCTV Footage goes viral

திருவெற்றியூர் காலடிப் பேட்டை என்கிற பகுதிக்கு அருகே உள்ள காவல் நிலையத்தின் எதிரில் உள்ள ஜீவல்லரி கடை ஸ்ரீகிருஷ்ணா ஜீவல்லரி. இந்த நகைக்கடைக்கு இன்று மாலை நகை வாங்குவது போல ஒருவர் மிகவும் டிப்டாப்பாகவும் க்ளீனாகவும் வந்த நபர் ஒருவர் 3 செயின்களை பார்த்துக்கொண்டிருந்தார். 

 

கடைக்காரரும் அவர் உண்மையில் கஸ்டமர்தான் என்று நம்பி வெகு இயல்பாக அமர்ந்திருக்கிறார். ஆனால் அந்த 3 செயின்களையும் பார்த்துக்கொண்டிருந்த நபர், தன் கையில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை நகைக்கடை உரிமையாளர் பக்தாராம் சவுத்ரியின் கண்களில் வீசிவிட்டு, அந்த 3 செயின்களையும் எடுத்துக்கொண்டு தப்பித்து ஓடினார். 

 

உடனே அவரை பிடிக்க முயலும் சவுத்ரி, சத்தத்துடன் அலறி, ஓடத் தொடங்கிய நபரை  பிடிக்க படாத பாடு பட்டு, டேபிளின் மீது தாவினார். ஆனாலும் அந்த ஆசாமியை பிடிக்க முடியாததால், எதிரே இருந்த திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்து விசாரித்து வருகின்றனர்.  

Tags : #ROBBERY #CRIME #CHENNAI #TAMILNADU #VIRAL #CCTV