அதிகாலையில் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் வந்த பெண்மணிக்கு அடி, உதை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 28, 2018 03:27 PM
Man Assaults Women Beacause of her Pet Dog went urinate near his home

சென்னையில் தன் வீட்டுச் சுவரில் நாய் ஒன்று சிறுநீர் கழித்ததாகச் சொல்லி, வாக்கிங் சென்ற நாயின் உரிமையாளரை, வீட்டு உரிமையாளர் இரும்பு கம்பியால் தாக்கியுள்ள கொடூரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னயின் நங்கநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுகுணா. இவர் தன் வளர்ப்பு நாயுடன் அதிகாலையில் நடைபயிற்சி சென்றபோது அவ்வழியில் இருந்த சக்தி என்பவரின் வீட்டருகே சென்ற நாய் சத்தமாக குரைத்துள்ளது.


அதோடு  வீட்டு சுவர் மீது சிறுநீர் கழித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளர் சக்தி, ஓடிவந்து  வளர்ப்பு நாயின் உரிமையாளர் சுகுணாவை இரும்பு கம்பியால் தலையில் கொடூரமாக தாக்கியதால் சுகுணா படுகாயமடைந்து ஆதம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து சக்தி தலைமறைவாகியுள்ள நிலையில், சக்தியின் அண்ணனை மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #DOG #ASSAULT #WOMEN #MAN #CHENNAI #TAMILNADU