டெல்லி ஐஏஎஸ் அகாடமியில் பயின்றுவந்த தமிழக மாணவி மர்ம மரணம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 28, 2018 12:40 PM
Student Shreemathi Tamilnadu dead in delhi IAS Academy

டெல்லியில் உள்ள ஒரு பிரபல தனியார் ஐ.ஏ.எஸ்.அகாடமியில் பயின்று வந்தவர் ஸ்ரீமதி. வருடாவருடம் வரவிருக்கும் அரசு நிர்வாகம் மற்றும் அரசுப் பணியாளர் தேர்வுகளுக்காகவே இயங்கும் ஏகப்பட்ட அகாடமிக்கள் உள்ளன. இதுபோன்ற அகாடமிதான் இதுவும். இந்த நிலையில் இந்த அகாடமியில் பயின்ற ஸ்ரீமதி என்கிற மாணவி தன்னுடைய அறையில் இறந்து கிடந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இது குறித்து தகவல் அறிந்த கரோல் பார்க் பகுதியின் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து பெற்றோர்கள் டெல்லிக்கு விரைகின்றனர்.

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீமதி, ஐஏஎஸ் படிப்பை படிக்க வேண்டும் என்கிற அதிக மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் தொந்தரவுகளா, இல்லை கொலை செய்யப்பட்டுள்ளாரா என்று பல்வேறு கோணத்தில் விசாரணைகள் நடந்துவருகின்றன.

Tags : #COLLEGESTUDENT #SCHOOLSTUDENT #IASACADEMY #DELHI #TAMILNADU #SHREEMATHI