"நடன ஆசிரியரை சுட்டு கொன்ற நபர்"...அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 26, 2018 03:43 PM
Shocking video of a dance instructor being shot dead in Delhi

டெல்லியில் நடனத்தை கேலி செய்ததால்,நடன ஆசிரியரை சுட்டு கொன்ற கொடூரம் நடந்துள்ளது.சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

டெல்லியில் வால்மீகி ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது இளைஞர்கள் நடனமாடுவது வழக்கம்.அந்த வகையில் கடந்த புதனன்று கோவிலின் அருகில் இளைஞர்கள் கூட்டமாக நடனமாடிக்கொண்டிருந்தார்கள்.அப்போது அங்கு வந்த அவினாஷ் என்ற நடன ஆசிரியர்,அங்கு நடனமாடிக்கொண்டிருந்த ஒரு நபரின் அசைவுகளை கேலி செய்தததாகக் கூறப்படுகிறது.

 

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த நபர் அவினாஸிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து ஆத்திரத்தோடு அங்கிருந்து சென்ற அந்த நபர், சிறிது நேரத்தில் தமது  நண்பர்களுடன் அங்கு வந்தார்.இந்நிலையில் யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில் அவினாஷை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

 

இதில் படுகாயமடைந்த அவினாஷை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.ஆனால் அவர் முன்பே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.இந்த கொலை சம்பவ காட்சிகள்,அங்கு நடனக் கொண்டாட்டத்தை பதிவு செய்து கொண்டிருந்த ஒருவரின் செல்போனில் பதிவாகியுள்ளன.

Tags : #MURDER #DELHI #DANCE TEACHER