சூட்கேஸில் அடைத்து வீசப்பட்ட மாடல் அழகியின் பிரேதம்.. கொலையாளியின் வாக்குமூலம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 16, 2018 05:22 PM
Guy Arrested who kills a model and stuffs her body in suitcase mumbai

மும்பையிலிருந்து சில மைல் தூரத்தில் இருக்கும் முக்கியமான வணிக முனையம் மைண்ட்ஸ்பேஸ் என்கிற இடம். மேற்கு மும்பையின் மலாட் என்கிற இடத்தில் இருக்கும் இந்த ஏரியாவில் ஒரு இளம் பெண் படுகொலை செய்யப்பட்டு ஒரு சூட்-கேஸ் பேகில் அடைத்து வீசப்ப்ட்டிருந்தார்.

 

கடந்த திங்களன்று நிகழ்ந்துள்ள இந்த கோர சம்பவத்தினை விசரித்த காவல்துறையினர் அந்த பெண் மும்பையில் வசித்து வந்த, ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட, மான்சி தீக்‌ஷித் என்னும் பெயருடைய 20 வயதுக்குட்பட்ட மாடல் அழகி என்றும், அவரை கொன்று இவ்வாறு சூட்கேஸில் அடைத்து வீசியவர் அவரது சொந்தக்காரரான 19 வயதுடைய முசாமில் இப்ராஹீம் சையது என்றும் கண்டறிந்து, சையதை கைது செய்துள்ளனர். 

 

மான்சி தீக்‌ஷித், தனது உறவினரான சையது வீட்டுக்கே கடைசியாக சென்றுள்ளார், அங்கு சையதுக்கும் அவருக்கும் நிகழ்ந்த தகராறில் சையது மான்சியை கொன்று, சூட்கேஸ்-பேகில் அவரது உடலை கூறுபோட்டு அடைத்து எடுத்துக்கொண்டுள்ளார். பின்னர் கேப் ஒன்றை புக் செய்து அதில் வெகுதூரம் சென்று மைண்ட்ஸ்பேஸ் அருகே தூக்கி  வீசியுள்ளார். அப்போதே, ஏதோ சரியில்லை என சந்தேகப்பட்ட கேப்-டிரைவர், இந்த கொலை பற்றிய முழு விபரத்தையும் போலீசாரிடம் கூறி உறுதி செய்துள்ளார். 

Tags : #MUMBAI #MURDER #MODEL #CRIME