சென்னை: பிறந்த குழந்தையை வாளியில் அமுக்கி கொன்ற ‘மணமாகாத’ தாய் கைது!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 20, 2018 03:45 PM
Unmarried TN Mother kills her baby with the guidance of mother& Lover

சென்னை கிண்டி கன்னிகாபுரம் சாலையில் குப்பைத் தொட்டியில் கிடந்த ஆண் குழந்தையை வாளித்தண்ணீரில் வைத்து அமுக்கி கொன்றதற்காக குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தீவிர விசாரணைக்கு பிறகே போலீசார் குழந்தையின் தாயான ‘மணமாகாத’ வசந்தியை (24 வயது) கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். வசந்திக்கு உடந்தையாக இருந்த அவருடைய அம்மா விஜயா (55 வயது) மற்றும் வசந்தியின் காதலரான போரூரைச் சேர்ந்த 26 வயது ஜெபராஜ் கைது செய்யப்பட்டனர்.

 

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வசந்திக்கும் ஜெபராஜூக்கும் இடையே மலர்ந்த காதலால் வசந்தி 7 மாத கர்ப்பிணி ஆனார். அதுவரை பயந்த வசந்தி, அதன் பின்னரே தாயிடம் காதல் மற்றும் கர்ப்ப விவகாரத்தை கூறியிருக்கிறார்.

 

நிலைமை கைமீறி போகவே பிறந்த ஆண்குழந்தையை அக்கம் பக்கத்தினரின் ‘மணமாவதற்கு முன்பே கர்ப்பிணி ஆகிவிட்டாளா வசந்தி?’ என்று கேட்க வாய்ப்புள்ள கேள்விக்கு அஞ்சி, விஜயா ஜெபராஜிடம் பேசி, வசந்தி, ஜெபராஜ், விஜயா மூவரும் குழந்தையை வாளிக்குள் வைத்து அமுக்கிக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர்.

 

சாவியைத் தொலைத்துவிட்டு பூட்டுக்கு தண்டனை கொடுத்த கதையாய், பச்சிளம் சிசுவை சமூகத்தின் கேள்விகளுக்கு பயந்து, ஏற்கனவே செய்த தவறை மறைக்க இன்னொரு பாவத்தை செய்துள்ள இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHILDMURDER #CHENNAI #LOVE #UNMARRIEDMOTHER #MOMKILLSBABY