கல்யாணம் முழுவதும் ‘ஹாரிபாட்டர் தீம்’: கலக்கிய தம்பதிகள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 31, 2018 04:31 PM
UK couple had a Harry Potter-themed wedding photos goes viral

யுகே-வின் வல்சால் என்கிற இடத்தில் தம்பதியர்களிடையே நிகழ்ந்த திருமணம் ஹாரிபாட்டர் திரைப்பட காஸ்ட்யூம்கள் மற்றும் அட்மாஸ்பியருடன் நடந்துள்ளது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

 

மார்கஸ் மற்றும் கெரோலின் இருவரும் ஹாரிபாட்டர் தொடர் திரைப்பட சீரிஸ்களின் ரசிகர்கள் என்பதால், அவர்களின் திருமணம் முழுக்க முழுக்க ஹாரிபாட்டர் படங்களில் வருவது போன்ற ஆடை, அணிகலன்கள், ஹாரிபாட்டர் படத்துக்கு பயன்படுத்தப்படும் எழுத்து வடிவங்கள் என எல்லாவற்றையும் இந்த கல்யாணத்தில் காண முடிந்தது.

 

இதுபற்றி கூறிய மணப்பெண்ணும் மாப்பிள்ளையும், ஜே.கே.ரவுலிங் எழுதி திரைப்படங்களாக வெளிவந்த ஹாரிபாட்டர் சீரிஸ்களுக்கு தாங்கள் இருவரும் தீவிர ரசிகர்கள் என்பதால், இவ்வாறு தங்கள் திருமணத்தின் அனைத்து அலங்காரங்களும் ஹாரிபாட்டர் மயமாகவே இருந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், வீட்டில் பூசப்பட்ட வண்ணங்கள் உட்பட அனைத்தும் ’ஹாரிபாட்டர் தீம்’ வைத்து வடிவமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். 

Tags : #UK #LONDON #MARRIAGE #VIRAL #HORRYPOTTER