'தீபாவளியை மகிழ்ச்சியா கொண்டாடுங்க'.. 2 நாட்கள் அரசு விடுமுறை அறிவிப்பு!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 29, 2018 10:27 PM
Tamil Nadu Government announced 2 days leave for Diwali

தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,'' தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

 

அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடும் பொருட்டு இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்குப்பதிலாக  10-11-2018 அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #TAMILNADU #DIWALI2019