'ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும்'; ‘நக்கீரன்’ விவகாரத்தில் ஆளுநர் மாளிகை விளக்கம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 12, 2018 01:06 PM

அருப்புக்கோட்டை பல்கலைக் கழக பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீது குற்றம் சாட்டி நக்கீரன் கோபால் நக்கீரனில் கட்டுரை வரைந்திருந்தார்.அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குற்றமற்றவர் எனக் கூறி விடுதலை செய்யப்பட்டார்.

 

TN Governor’s office explains case against Nakkeeran Gopal

மாணவியர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இவ்வாறு குற்றம் சாட்டியிருந்ததை அடுத்து, மாநிலத்தின் முதல் குடிமகனான ஆளுநர் மீது தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததற்கு ஆளுநர் மாளிகை கண்டிப்புடன் அறிக்கை வெளியிட்டுள்ளது. நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும், நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை அளிக்கும் காவல்துறையின் அறிக்கையிலேயே எல்லா விபரங்களும் இருக்கின்றன எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் பத்திரிகை சுதந்திரத்தை ஆளுநர் முடக்குவதாகக் கூறுவது வேடிக்கையாகவும் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில், பத்திரிகை நெறிமுறைகளை மீறி, ஆளுநர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுத்ததாகவும், நிர்மலாதேவி ஆளுநர் மாளிக்கைக்கு வந்ததில்லை எனவும், தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருக்கும் எவருடனும் நிர்மலா தேவிக்கு தொடர்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பல்கலைக் கழக சார்பில் தங்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.


ஆளுநரை பயமுறுத்தும், அவரின் மாண்பை சீர்குலைக்கும், ஆளுநரின் வேலையை செய்யவிடாமல் தடுக்கும் இதுப்போன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதோடு, ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும் என்று ராஜ்பவன் எச்சரித்துள்ளது. சுதந்திர இந்தியாவில் ஒரு பத்திரிகை மீது இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது காரணம் இல்லாமல் இல்லை என்பதால், இந்த விளக்க அறிக்கை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : #NAKKEERANGOPALARREST #NAKKEERANGOPAL #RAJBHAVAN #TAMILNADU #BANWARILALPROHIT