பிறந்த குழந்தைக்கு இந்த பெயர் வைத்ததால் 11 ஆயிரம் டாலர் வெகுமதி அளித்த உணவு நிறுவனம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 02, 2018 05:53 PM
KFC Pays 11,000 Dollars for naming founder Harland\'s name

அமெரிக்காவில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு ஹர்லாண்ட் ரோஸ் என்கிற பெயர் வைக்கப்பட்டதை அடுத்து அந்த குழந்தைக்கு 11 ஆயிரம் டாலர்களை பரிசாக வழங்கியுள்ளது பிரபல உணவு நிறுவனமான KFC. 

 

உலகம் முழுவதும் KFC உணவகத்தின் பண்டக சாலை இல்லாத இடமே கிடையாது என்கிற அளவுக்கு இந்த உணவகத்தின் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிறுவனம் அண்மையில் ஒரு போட்டியை அறிவித்தது. 

 

அதன்படி KFC நிறுவனரது பெயரை முதலில் பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் வைக்கப்படும் பெயராக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன், ‘நேம் யுவர் பேபி ஹார்லண்ட்’ என்கிற தலைப்பில் வைக்கப்பட்ட போட்டியில், ஹார்லாண்ட் ரோஸ் என்று பெயர் சூட்டப்பட்ட பெண் குழந்தை வெற்றி பெற்றதை அடுத்து இந்த குழந்தைக்கு 11 ஆயிரம் டாலரை கேஎஃப்சி நிறுவனம் வழங்கியுள்ளது. 

Tags : #KFC #NEWBORNBABY #HARLANDROSE #VIRAL #KFCNAMECONTEST #NAMEYOURBABYHARLAND