தல 59: பிங்க் படத்தின் ரீமேக்கா?.. ஹெச்.வினோத் விளக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 15, 2018 06:11 PM
Director H Vinoth clarifies about Thala 59 Rumor

விஸ்வாசம் படத்துக்குப்பின் தீரன் புகழ் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

 

இந்தநிலையில் நேற்று ட்விட்டரில், ''தல 59 பிங்க் படத்தின் ரீமேக் இல்லை'' என்று, ஹெச்.வினோத் என்னும் பெயரில் உள்ள கணக்கில் இருந்து தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் எழுந்தது.

 

இந்தநிலையில் இதுகுறித்து இயக்குநர் ஹெச்.வினோத் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,''என்னுடைய அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு எதுவாயினும், அது நிச்சயம் தயாரிப்பாளர் தரப்பில் வெளியிடப்படும். அதுவுமல்லாமல் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்  உள்ளிட்ட எந்தச் சமூக வலைதளத்திலும் எனக்குக் கணக்குகள் கிடையாது,'' என தெரிவித்துள்ளார்.

Tags : #AJITHKUMAR #VISWASAM #THALA59 #HVINOTH