'ஹர்பஜனிடம் இதனால் தான் அறை வாங்கினேன்'.. மனந்திறந்த பிக்பாஸ் போட்டியாளர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 23, 2018 06:03 PM
Sreeshanth recalls the time he was slapped by Harbhajan Singh

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிடம் தான் அறை வாங்கிய காரணம் குறித்து கிரிக்கெட் வீரரும், பிக்பாஸ் போட்டியாளருமான ஸ்ரீசாந்த் மனம் திறந்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில்,''மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றப் பிறகு நான் ஹர்பஜனை சீண்டும் சொற்களை கூறி இருக்கக் கூடாது. அதுதான் அவரை கோபமடைய செய்தது.எனினும் நான் ஹர்பஜன் மீது மிகுந்த  மரியாதை வைத்திருக்கிறேன். அந்த சம்பவத்துக்குப் பிறகு இருவரும் சந்தித்து,எங்களுக்கு இடையே இருந்த பிரச்சனையை தீர்த்து கொண்டோம்,'' என தெரிவித்துள்ளார்.

 

ஐபிஎல்லில் மும்பை-பஞ்சாப் இடையே நடைபெற்ற ஆட்டத்தின்போது ஹர்பஜன், ஸ்ரீசாந்தினை அறைந்தார். இது அப்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ஸ்ரீசாந்த் அந்த சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டதற்கு, நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags : #IPL #BIGGBOSS #HARBHAJANSINGH #SREESANTH