#ஐபிஎல்2019: என்ன இத்தனை வீரர்களைக் 'கழற்றி விட்டதா' சென்னை சூப்பர் கிங்ஸ்?

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 15, 2018 12:01 PM
Chennai Super Kings release three players ahead of IPL 2019 auction

வருகின்ற 2019-ம் ஆண்டு ஐபிஎல்லுக்குத் தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒருசில வீரர்களை கழற்றி விட்டுள்ளது.

 

2 ஆண்டுகள் தடைக்குப்பின் மீண்டும் விளையாட வந்த சென்னை அணி மீண்டும் கோப்பையை வென்று சாதனை செய்தது. இந்தநிலையில் இதன்படி கடந்த சீசனில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட், உள்நாட்டு வீரர்கள் கனிஷ்க் சேத், ஹிதிஸ் சர்மா ஆகியோரை அணி நிர்வாகம் கழற்றிவிட்டுள்ளது.

 

அதேநேரம் தோனி உள்ளிட்ட சுமார் 22 வீரர்களை சென்னை அணி தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தக்கவைக்கப்பட்ட 22 வீரர்கள்விவரம்:-

 

எம்.எஸ்.தோனி(கேப்டன்), ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டிவைன் பிராவோ, கரண் சர்மா, ஷேன் வாட்ஸன், ஷர்துல் தாக்கூர், அம்பதி ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூப்பிளசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி, ஆசிப், என் ஜெகதீசன், மோனு சிங், துருப் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், டேவிட் வில்லி.