'தல தோனி மற்றும் சச்சினின் வாழ்த்து மழையில் கோலி'....ட்விட்டரில் உருகிய அனுஷ்கா!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 05, 2018 08:09 PM
Virat Kohli celebrating his 30th birthday.dhoni special wishes to him

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி முத்திரையை பதித்து,இளம் வயதில் எண்ணற்ற சாதனைகளை புரிந்த இந்திய கேப்டன் விராட் கோலி,இன்று தனது 30வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.இளம் வயதில் அதிக ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தவர் விராட் கோலி.

 

2008-ம் ஆண்டில் சர்வதேச அரங்கில் அறிமுகமான வீராட்கோலி தொடக்கத்தில் பல சரிவுகளை சந்தித்தார்.ஆனால் தனது தொடர் முயற்சியாலும்,கடினமான உழைப்பாலும் 2010க்குப் பின் சாதனைகளை  மட்டுமே தன் வாழ்வில் கண்டு வருகிறார்.சர்வதேச அரங்கில் விளையாடத் தொடங்கிய முதல் ஆறு ஆண்டுகளில் ஐந்தாயிரம் ரன்களைக் கடந்த கோலி தற்போது 4 ஆண்டுகளில் ஐந்தாயிரம் ரன்களைக் கடந்துள்ளார். நான்காயிரம் ரன்களை வேகமாக கடந்த வீரர் என்று சச்சின் செய்த சாதனையை சமீபத்தில் கோலி முறியடித்தார்.

 

ஐசிசியின் ஒருநாள் வீரர் விருது, ஆல்ரவுண்டர் விருது என்று பல விருதுகளைப் பெற்ற வீராட் கோலி சமீபத்தில் மத்திய அரசு வழங்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். சாதனையாளரான கோலி இன்று 30வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின்,தல தோனி என பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வீராட் கோலிக்கு  தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

"கோலியின் பிறப்பிற்காக கடவுளுக்கு நன்றி" என கோலியின் மனைவியும்,பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags : #VIRATKOHLI #ANUSHKASHARMA #MSDHONI #HAPPYBIRTHDAY VIRAT