'இது என்ன கிரிக்கெட்டா...இல்ல ஓட்டப்பந்தயமா'? தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 05, 2018 06:53 PM
Comical Run Out of Shai Hope And Shimron Hetmyer news goes viral

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி,இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.நேற்று மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடர் கொல்கத்தாவில் துவங்கியது.இந்த போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

 

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.இந்திய பௌலர்களின் சிறப்பான பந்து வீச்சால்,தொடர்ச்சியான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தது.இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் குவித்தது.ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடிய ஹோப், ஹெட்மேயர் ஜோடி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

 

அவர்கள் மீதான எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக,ஹோப்,ஹெட்மேயர் ரன் அவுட் ஆன விதம் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.இருவரும் ஒரே முனையை நோக்கி ஓடி வர ஹோப் அவுட் ஆனார். இருவருக்கும் இடையே சரியான புரிதல் இல்லாமல் இந்த ரன் அவுட் நிகழ்ந்தது. இதனை ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்துள்ளனர். குல்தீப் மற்றும் அறிமுக வீரர் குர்ணால் ஆகியோர் இணைந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இந்த போட்டியை இந்தியா எளிதாக வென்றது.

 

 

Tags : #CRICKET #VIRATKOHLI #INDIA VS WEST INDIES #SHAI HOPE AND SHIMRON HETMYER #RUN OUT