'ஒரே ஒரு போட்டோ தான்'.. பும்ராவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 01, 2018 06:35 PM
Jasprit Bumrah Becomes Hilarious Meme On Twitter

பிசிசிஐ வெளியிட்ட ஒரே ஒரு போட்டோவால், நெட்டிசன்கள் பும்ராவை வச்சு செய்து கொண்டிருக்கின்றனர்.

 

கடந்த 29-ம் தேதி பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில்,'' விமானத்துக்காக காத்திருக்கும் வீரர்கள் மிகவும் பிரபலமான ஆன்லைன் கேம் ஒன்றை விளையாடுகின்றனர்,'' என தெரிவித்திருந்தது. 

 

தோனி, புவனேஷ்,கலீல் என கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் மொபைலும், கையுமாக அமர்ந்து கேம் விளையாட அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு பந்துவீச்சாளர் பும்ரா அமர்ந்திருந்தார்.

 

இதனைப்பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? பும்ரா ஏன் மொபைல் இல்லாமல் இருந்தார் என, ஆளாளுக்கு தங்களுக்குத் தோன்றிய காரணங்களை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

குறிப்பாக பும்ரா மொபைலில் சார்ஜ் இல்லாததால், அவர் வெறுங்கையுடன் அமர்ந்து இருந்ததாகவும், பேமிலி கெட்-டு-கெதரில் மொபைல் இல்லாத குழந்தை எனவும் கமெண்டுகளை பறக்க விட்டு வருகின்றனர்.

 

வேடிக்கை பாத்தது ஒரு குத்தமா?..... இல்ல வேடிக்கை பாத்தது ஒரு குத்தமா? 

Tags : #CRICKET #MSDHONI #VIRATKOHLI #JASPRITBUMRAH