9 விக்கெட் வித்யாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா வெற்றி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 01, 2018 04:20 PM
Cricket Score Live updates of India vs West Indies 5th ODI

இந்தியா பங்குபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் கடந்த 4 போட்டிகளில்,  இந்தியா 2க்கு 1 என்கிற விகிதத்திலும், இரண்டாம் போட்டி டை-ஆகவும் முடிந்தது. 

 

இந்நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையான 5-வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 31.5 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. 

 

முதலில் டாஸ் வென்று  பேட்டிங் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி ஆட்ட தொடக்கத்திலேயே கவனமாக கையாண்டு,அதிரடியாக இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி,  முதல் 9 ரன்களுக்கு வரிசையாக விக்கெட்டுகளை கைப்பற்றியது.

 

பின்னர்  25.2 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ்  7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்ததோடு, இறுதியில் 31.5 ஓவர்கள் முடிவில் 104 ரன்கள் எடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட் ஆகியது.

 

பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஷிகர் தவான் 6 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து விளையாடிய ரோகித் ஷர்மாவும் விரோட் கோஹ்லியும் இணைந்து 14.5 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்து இலக்கை கைப்பற்றி அணியை வெற்றிபெறச் செய்தனர். 

 

56 பந்துகளுக்கு ரோகித் ஷர்மா 63 ரன்களும், 29 பந்துகளுக்கு விராட் கோஹ்லி 33 ரன்களும் எடுத்தும் ஆட்டமிழக்காமல் விளையாண்டனர். இந்நிலையில் 3க்கு 1 என்கிற கணக்கில் வென்றுள்ள இந்தியா 6வது ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியுள்ளது.

Tags : #CRICKET #ODI #INDVSWI #INDIA #INDVWI #TEAMINDIA