‘மேட் இன் சைனா’ என எழுதுங்கள்: படேல் சிலை மீது விமர்சனம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 31, 2018 12:41 PM
PM Unveils Sardar Patel\'s Statue Of Unity and congress critics

சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த நாளை ஒட்டி, குஜராத்தில் 182 மீட்டர் உயரம் கொண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலைதான்  உலகிலேயே மிக உயரமான சிலை என்று சொல்லப்படுகிறது. அதாவது அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவி சிலையை விட, இந்த சிலை இரண்டு மடங்கு உயரமானது என்றும் இந்த சிலை 2,989 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

2013, அக்டோபர் 31-ம் தேதி, குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி இந்த திட்டத்தைத் தொடங்கினார். இந்தியாவின் இரும்பு மனிதர் என்பதால் பல நாடுகளில் இருந்து, பல நாடுகளில் இருந்து இரும்பு பெறப்பட்டது. 250 பொறியாளர்கள், 3400 ஊழியர்களின் 33 மாத உழைப்பில், பத்ம பூஷன் விருது வென்ற சிற்பி ராம் வி சுதர் வடிவமைத்த இந்த சிலையை அமைக்க லார்சன் அண்டு டூப்ரோ மற்றும் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனமும் உதவி செய்துள்ளன.

 

ஆனால் இவ்வளவு பெரிய சிலையை நிறுவ இந்தியாவில் வெண்கல தட்டுப்பாடு இருந்ததால், பொதுவாக ஏலம் விடப்பட்டதாகவும், சீனா இந்த ஏலத்தைக் கைப்பற்றியதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.முன்னதாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெண்கலத்தின் மூலம் இந்த சிலை உருவானாதால், சர்தார் சிலையில் ‘மேட் இன் சைனா''  என்று எழுதிவைக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  விமர்சித்துள்ளார்.

Tags : #NARENDRAMODI #RAHULGANDHI #CONGRESS #BJP #STATEOFUNITY #VALLABHAIPATEL #INDIA #RUNFORUNITY