மோடியும் அமித் ஷாவும் ‘ரிங் மாஸ்டர்கள்’ அல்ல; இருவரும் ‘கிங் மாஸ்டர்கள்’: பாஜக பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 25, 2018 12:47 PM
Modi, Amit shah are King Masters and not Ring Masters Says Tamilisai

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மிக அண்மையில் தன் பிறந்த நாளை கொண்டாடினார். இதனை அடுத்து, தமிழக அரசு அதிகாரத்தில் அதிமுக இருக்க,எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக-வை தம்பிதுரை விமர்சித்திருந்தார். சர்க்கஸ் கூடாரத்தில் இருக்கும் கர்ஜனை மிகுந்த விலங்குகளை சிலரால் மட்டுமே ஹேண்டில் செய்ய முடியும். அதற்காக பயிற்சி பெற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட இரும்பு வளையம் என்கிற ரிங்குக்குள் அந்த மிருகங்களுக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவார்கள்.

 

அதன்படி திமுக-வுக்கு ரிங் மாஸ்டர் அமித் ஷா’ தான் என்று ஆளும் அதிமுக-வைச் சேர்ந்த தம்பிதுரை கூறியிருந்தார்.  இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாஜக-வின் மாநில செயலாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், ’மோடி மற்றும் அமித்ஷாவை திமுகவினர் ரிங் மாஸ்டர் என்கின்றனர்,  ஆனால் உண்மயில மோடி, அமித்ஷா இருவரும் கிங் மாஸ்டர்ஸ்’ என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.