Aan Devadhai India All Banner

‘அதிமுக மற்றும் திமுக’ கட்சிகளை தமிழக அரசியலில் இருந்து அகற்ற ‘மநீம’பாடுபடும்: கமல்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 14, 2018 11:21 AM
Will Clean AIADMK and DMK from TN Politics Says MNM Chief Kamal Haasan

'மக்கள் நீதி மய்யம்' காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும் என்று நடிகரும் அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். முன்னதாக சேலம்,  நாமக்கல் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல், அங்குள்ள பலரையும் சந்தித்து உரையாற்றி வருகிறார்.


இதேநேரம் சேலம் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கமல் ‘மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது. அனைத்து கட்சிகளும் கல்லூரிகளில் அரசியல் பேசினாலும் தவறில்லை" என்று கூறினார். பின்னர் கூறிய அவர், திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு நிகழ்ந்தால், வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும் என்று நேரடியாகவேக் கூறினார்.


அதுமட்டுமல்லாது தமிழகத்தில் முக்கியமான கட்சிகளாக பலவாண்டு காலம் இருந்துவரும் அதிமுக மற்றும் திமுகவை தமிழக அரசியலில் இருந்து அகற்றுவதற்கு மக்கள் நீதி மய்யம் பாடுபடும் என்று கூறியவர் திமுகவுடன் 'மக்கள் நீதி மய்யம்'  கூட்டணி அமைக்காது" என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.