பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பார்ட்டி கொடுத்த கமல்..இவர்கள் மட்டும் ஆப்செண்ட்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 05, 2018 01:48 PM
BiggBoss Tamil Contestants come together for success party

கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதில் ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். ஐஸ்வர்யா, விஜயலட்சுமி 2-வது மற்றும் 3-வது இடங்களைப் பிடித்தனர்.

 

இந்தநிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் விருந்தொன்றை அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை போட்டியாளர்களில் ஒருவரான மஹத் தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

அதில் மஹத், டேனியல், ஷாரிக், பாலாஜி, விஜயலட்சுமி, சென்றாயன், ஜனனி, ரித்விகா, ரம்யா என்.எஸ்.கே, பொன்னம்பலம்,வைஷ்ணவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா, மமதி சாரி, நித்யா, ஆனந்த் வைத்யநாதன் மற்றும் மும்தாஜ் ஆகியோர் அந்த போட்டோவில் இடம் பெறவில்லை. இவர்கள் கலந்து கொள்ளாததன் காரணம் என்னவென்பது தெரியவில்லை.