கூகுள் தேடுபொறியில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட முதல்வர் இவர்தான்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 28, 2018 11:31 AM
Yogi Adityanath is most searched CM on Google Trends

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கூகுள் தேடுபொறியில் அதிகம் தேடப்பட்டவர்கள் என்கிற பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த பட்டியலில் இடம் பெறும் நபர்கள் யாராக வேண்டுமானாலும் இருப்பார்கள். 

 

அவ்வகையில் இம்முறை கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக இந்தியாவின் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெயரை கூகுள் வெளியிட்டுள்ளது. 

 

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதுபோல், மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் என்கிற புகழை இவர்கள் அடைவர். இதற்குக் காரணமாக முக்கிய காலக்கட்டம் அமையும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட போராட்ட காலக்கட்டத்தில் அந்த போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் அதிகம் தேடப்படும்பொழுது அவர்கள் முதன்மையான இடத்துக்கு தேடுபொறியினால் கொண்டுவரப்படுவர்.

 

சத்தீர்ஸ்கர் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களுக்காக யோகி ஆதித்யநாத் பிரச்சார விழிப்புணர்வு உரையாற்றுவார் என வந்திருந்த அறிவிப்பினால் பலரும் கூகுளில் யோகி ஆதித்யநாத் பற்றி தேடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : #GOOGLE #YOGI ADITYANATH #GOOGLETREND #MOSTSEARCHEDPERSON #INDIA #UTTERPRADESH