மருமகள் ‘பத்தினியா’ என அறிய,மந்திரவாதி சொன்ன கொடூர சோதனை..மாமியார் கைது!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 26, 2018 04:17 PM
Mother-in-law burnt the hands of daughter-in-law to check adultery

உத்திர பிரதேசத்தில் மதுரா என்கிற ஊரில் சுமனி  என்கிற இளம்  பெண் கடந்த ஏப்ரல் மாதம் ஜெய்வீர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஜெய்வீரின் அம்மாவும், ஜெய்வீரும் சேர்ந்து சுமனிகயிடம் வரதட்சணை  கேட்டு கொடுமை செய்துள்ளனர். சுமனியின் கைகளை கத்தியால் கிழித்தும் அவரது கணவர் ஜெய்வீர் கொடுமை செய்துள்ளார். 

 

அதற்கு பின் சுமனியின் மீது பழி சுமத்துவதற்காகவிம், அவர் மீது அவரது கணவர் ஜெய்வீருக்கு வந்த சந்தேகத்தினாலும் சுமனியின் மாமியாருக்கு ஒரு யோசனை வந்துள்ளது. அதன் படி, தன் மருமகள் சுமனி உண்மையில் கன்னித் தன்மை உள்ளவரா என சோதிக்க, மரக்கட்டகளை கொளுத்தி, அந்த நெருப்பில் சுமனியின் கைகளை விடச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். 

 

அக்னி பரீட்சை என்று இதனை சொல்லும் இவர்கள், இன்னும் இவ்வாறு கையை விடும்பொழுது, நெருப்பு சுடவில்லை என்றால் சுமனி பத்தினி என்றும், கைகள் எரிந்தால் சுமனி பொய் கூறுகிறாள் என்றும் முடிவு செய்யும் நோக்கில் இவ்வாறு செய்துள்ளனரா அல்லது சுமனியின் மீதுள்ள சந்தேகத்தால் வேண்டுமென்றே இப்படி பழி வாங்கினரா என்பது தெரியவில்லை.  

 

ஆனால் அருகில் இருக்கும் காவல்துறையினரிடம் இந்த சம்பவத்தைக் கூறி சுமனி புகார் அளித்துள்ளதை அடுத்து, போலீசார் இந்த கொடுமையை செய்த மாமியார் மீதும், சுமனியின் கணவரின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags : #MATHURA #MOTHER-IN-LAW #DAUGHTER-IN-LAW #UTTERPRADESH #AGNIPARIKSHA #ADULTERY #ACCUSED #POLICE #INDIA