‘அவர் சூப்பர் ஸ்டார்.. அவர் உள்ளவரை இதற்கு அழிவே கிடையாது: பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 03, 2018 01:15 PM
Virat kohli is a superstar who keeps Test cricket alive, Graeme smith

இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி கேப்டனாகவும் முக்கிய மைல் ஸ்டோன்களை கடந்து வருவதால் அவருக்கு உலகம் முழுவதும் அநேகமான கிரிக்கெட் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். 

 

குறிப்பாக வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள்  கேப்டன்கள் பலரும் விராத் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தையும் அவரது பெர்ஃபார்மென்ஸையும் அவ்வப்போது புகழ்ந்து பேட்டிகளை அளித்து வருகின்றனர்.அண்மையில் விராத் கோஹ்லி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சினுக்கு இணையான சாதனையை நிகழ்த்தி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்து புகழ்பெற்றார். 

 

இதுகுறித்து, தென்னாப்ரிக்க முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரேமி ஸ்மித்,  ‘விராத் கோஹ்லி உண்மையில் சூப்பர் ஸ்டார். அவருக்கு கிரிக்கெட் மீதுள்ள காதல்தான் அவர் டெஸ்ட் மேட்ச்களில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதற்கும் அதிக ரன் குவிப்பதற்கும் காரணம். ஐபிஎல் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்டாடும் சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போன்ற விளையாட்டுகள் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணமே இந்திய கிரிக்கெட் அணியில் விராத் கோஹ்லி போன்றவர்கள் இருப்பதுதான்’ என்று கூறியுள்ளார். 

Tags : #VIRATKOHLI #GRAEMESMITH #CRICKET #INDIA #TESTMATCH