"இப்படியா மேக்கப் பிரஷ் செய்வது":விசித்திரமான வீடியோ வெளியிட்ட பெண்...திட்டி தீர்த்த நெட்டிசன்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 03, 2018 01:06 PM
Cutting Off Hair To Make Makeup Brush video goes viral

அழகு கலை குறித்த ஆவல் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இதற்காக பயிற்சி முறைகளை நேர்முக முறையிலோ அல்லது ஆன்லைனிலோ கற்றுக் கொள்ளலாம்.

 

இணையதளங்களில் தற்போது பிரபலமாகிவரும் பயிற்சி வகுப்புகளில் வீட்டிலேயே,எவ்வாறு எளிதான அழகு கலை பொருட்களை செய்வது குறித்து எளிதாக விளக்குகிறது.இந்நிலையில்  ‘டூயிட் யுவர் செல்ஃப்' என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் வீடியோ மேக்கப் பிரஷ்யை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை விளக்குகிறது.ஆனால் அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

 

காரணம் அந்த வீடியோவில் தோன்றும் பெண் 'தனது தலைமுடியை வெட்டி அதை வைத்து மேக்கப் பிரஷ்யை செய்வது எப்படி' எனபதை குறித்து விளக்குகிறார்.இன்ஸ்டாகிராமில் வெளிவந்த சில தினங்களில் ட்ரெண்டான இந்த வீடியோ, ட்விட்டரில் ‘வொர்ஸ்ட் டி.ஐ.யூ.' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. ‘5 மின்ட் கிராப்ட்ஸ்' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவை, 15 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

 

அதே நேரத்தில் 'என்னதான் அழகுக்குறிப்பு என்ற பெயரில் இந்த வீடியோ பதிவு வெளியிடபட்டாலும், பெண்கள் ஏன் தங்களது தலைமுடியை வெட்டி மேக்கப் பிரஷ்ஷாக பயன்படுத்த போகின்றனர் என சில நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

 

தற்போது அந்த வீடியோ பல மில்லியன் வியூஸை  கடந்து சென்று கொண்டிருக்கிறது.

Tags : #BIZARRE BEAUTY #CUTTING OFF HAIR #MAKEUP BRUSH #WORST DIY EVER