திருமணமாகி 6 மாதங்களில்...டைவர்சுக்கு விண்ணப்பித்த முன்னாள் முதல்வரின் மகன்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 03, 2018 12:35 PM
Lalu’s son Tej Pratap files for divorce from wife Aishwarya Rai

திருமணமாகி 6 மாதங்களில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் விவாகரத்து கேட்டு பாட்னா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

 

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்,இவருக்கும் பீகார் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.இந்நிலையில் தேஜ் பிரதாப் திடீரென பாட்னா நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.இந்த விவகாரம் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் புயலை கிளப்பியுள்ளது.

 

தேஜ் பிரதாப் டைவர்ஸ் கேட்டு விண்ணப்பித்த விவரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததும்,பதறிப்போன அவர்கள் உடனடியாக  தேஜ் பிரதாப் மற்றும் அவரது தாயார் ராப்ரி தேவியைக் காண  தேஜ் பிரதாபின் வீட்டுக்கு விரைந்தனர்.இதற்கிடையே ராஞ்சி சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ், தன்னைப் பார்க்க உடனடியாக வருமாறு தேஜ் பிரதாபுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

மே 12-ம் தேதி நடந்த தேஜ் பிரதாப் - ஐஸ்வர்யா ராய் திருமணம் மிக ஆடம்பரமான முறையில் நடைபெற்றது.இதில் சுமார் 10 ஆயிரம் வி.ஐ.பி.-க்கள் கலந்து கொண்டனர். பீகார் கவர்னர் சத்ய பால் மாலிக், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் லாலு மகனின் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவர். லாலுவின் 2-வது மகன் தேஜஸ்வி யாதவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்தான் தற்போது கட்சிப் பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

Tags : #LALU PRASAD #RJD #TEJ PRATAP YADAV #AISHWARYA RAI