ஐ.பி.எல் 2019: ஐதராபாத் அணியில் இருந்து விலகிய அதிரடி வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 05, 2018 10:35 PM
Shikhar Dhawan leaves Sunrisers Hyderabad for financial reasons

இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரரான ஷிகா் தவான் ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறாா்.இந்நிலையில் ஷிகா் தவான் தங்கள் அணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக சன் ரைசா்ஸ் ஐதராபாத் அணி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

 

நிதிப் பிரச்சினை காரணமாக ஷிகா் தவான் ஐதராபாத் அணியில் இருந்து டெல்லி அணிக்கு மாற்றப்படுவதாக சன் ரைசா்ஸ் நிா்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது."கனத்த இதயத்துடன் இதனை அறிவிக்கிறோம். எங்கள் அணிக்காக நீண்ட காலம் ஆடிய ஷிகா் தாவன் 2019ல் வேரொறு அணிக்கு செல்கிறாா்.

 

அவரை ஏலம் எடுத்தத் தொகை மீது அவருக்கு அதிருப்தி நிலவி வந்தது. இதனை நாங்கள் ஐ.பி.எல். விதிமுறைகளினால் மாற்றியமைக்க முடியவில்லை. இதனால் அவரை மற்றொரு அணிக்கு பரிமாற்றிக் கொள்வது இருதரப்பினருக்கும் உகந்ததாக இருக்கும்என்று அணி நிா்வாகம் கருதியது.

 

இத்தனை ஆண்டுகளாக ஷிகா் தவான் செய்த பங்களிப்புகளை சன்ரைசா்ஸ் மதிப்புடன் அணுகுகிறது. ஆனால் நிதிப்பிரச்சினை காரணமாக அவா் வேறு அணிக்கு செல்வது சரியென நினைத்து வருத்தமடைகிறோம். அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எங்களது வாழ்த்துகளை தொிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.