'தனது குட்டி ரசிகருடன் நேரம் செலவிட்ட தல தோனி'...வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 14, 2018 12:10 PM
Dhoni meets his young fan with his brilliant gesture video goes viral

இந்திய முன்னாள் கேப்டனும்,ரசிகர்களால் 'தல' என்று செல்லமாக அழைக்கப்படும் வீரருமான தோனி தன்னை சந்திக்க வந்த சிறுவனிடம் அன்பாக பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட தயாராக இருந்த தோனியிடம் பேசுவதற்காக சிறுவன் ஒருவன் வந்தான்.ஒடனே காரை நிறுத்திய தோனி,அவனிடம் அன்பாக பேசி கைகொடுத்து விட்டு கிளம்பி சென்றார்.தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

தோனியின் இது போன்ற செயல்கள் புதிதல்ல.சமீபத்தில்  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.அந்த போட்டி முடிந்து வெளியே வந்த தோனி அவருடன் புகைப்படம் எடுக்க காத்து கொண்டிருந்த, மாற்று திறனாளி ரசிகருடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டது வைரலானது.ரசிகர்கள் மீது எப்போதும் அன்பும்,மரியாதையும் வைத்திருப்பவர் தல தோனி என்று, அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்

Tags : #MSDHONI #CRICKET #YOUNG FAN #BRILLIANT GESTURE