அனுஷ்கா ஷர்மாவுக்கும் விராட் கோஹ்லிக்கும் தொழில் போட்டியா?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 11, 2018 04:06 PM
no competition between me and anushka sharma, says virat kohli

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா விளையாடும் நிலையில், விராட் கோஹ்லி பத்திரிகையாளர்களின் பேட்டி ஒன்றிற்கு அளித்துள்ள பதில்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


கிரிக்கெட் வீரர் கோஹ்லிக்கும் அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுக்கும் இடையே தொழில்போட்டி இருக்கிறதா என்பது பற்றி நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கோஹ்லி, ‘தனக்கும் தன் மனைவிக்குமான தனிப்பட்ட எவற்றையும் பொதுவெளியில் பேசுவதில்லை’ என்று கூறிய விராட் கோஹ்லி, 'இருவருக்குமான தொழில் ரீதியான போட்டி இருப்பதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் இருவருக்குமான புரிதலே இருக்கிறது' என்று கூறியுள்ளார்.


பாலிவுட்டில் பல வருடங்களாகவே, தன் திறமையினால் உழைத்து புகழை பெற்றுள்ளார் என்று கூறிய கோஹ்லி, மேலும் அனுஷ்கா ஷர்மாவுக்கு என்ன வேண்டும் என்பது அவருக்கு தெரியும். எனவே தங்களுக்குள் தொழில்போட்டி என்பதும், தொழில்கள் பற்றிய விவாதங்களும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags : #VIRATKOHLI #CRICKET #ANUSHKASHARMA