"நாட்டை விட்டு போ"...ரசிகருக்கு காட்டமாக பதிலளித்த கோலி:சர்ச்சையில் சிக்கியிருக்கும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 07, 2018 06:00 PM
Kohli\'s angry reply to fan, leave India if you dont like my batting

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின்,பேட்டிங்கை விமர்சித்த ரசிகரை நாட்டை விட்டு போகுமாறு கோலி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போட்டி என அனைத்து வகையான போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் இந்திய கேப்டன் விராட் கோலி.சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரில், விராட் கோலி தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்து சாதனைப் படைத்தார். மேலும், ஒருநாள் போட்டிகளில் விரைவாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் புதிய சாதனையையும் விராட் படைத்தார்.

 

தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் 20 ஓவர்கள் போட்டிகளுக்கு அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் வெளியிட்ட கருத்திற்குப் பதிலளித்தார்.அவ்வாறு அவர் ரசிகர் ஒருவருக்கு அளித்த பதில்தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

ரசிகர் ஒருவர் ''விராட் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறார். அவருடைய பேட்டிங்கில் எதுவும் சிறப்பாக இல்லை. எனக்கு இந்தியர்களை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைக் காணவே பிடிக்கும்,'' என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில்,விராட் பங்கேற்ற நிகழ்ச்சியில் ரசிகரின் இந்த கருத்துக்கு அவர் மிகவும் கட்டமாக பதிலளித்தார்.“நீ இந்தியாவில் வாழக்கூடாது என நான் நினைக்கிறேன். வேறு எங்காவது போய் வாழ்க்கை நடத்து. மற்ற நாடுகளை நேசித்தால், அப்போது எதற்கு நமது நாட்டில் இருக்கிறாய்? உனக்கு என்னைப் பிடிக்கவில்லையென்றால் கவலையில்லை. மற்ற நாட்டவர்களைப் பிடித்தால், நீ நமது நாட்டில் வாழக்கூடாது என கருதுகிறேன். உனக்கு எது முதன்மையானது என்பதை தேர்ந்தெடு,” என கடுமையாக தாக்கியுள்ளார்.

 

விராட் கோலியின் இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும்,பலர் அவருக்கு கடுமையான கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள்.ஒரு வீரரை விரும்புவதும் வெறுப்பதும் ரசிகர்களின் தனிப்பட்ட விருப்பம் என பலரும் ட்விட்டரில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.இந்நிலையில் விராட் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.