குட்டிகளின் அருகிலேயே அமர்ந்து கண்ணீர் விட்ட நாய்: மனிதர்களின் மிருகச்செயல்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 07, 2018 05:45 PM
A Cruelty Act - four puppies near Hyderabad were burnt alive

ஹைதராபாத்தில் நிலவிய பதற்றமான சம்பவம்தான் இது. ஒரு தாய் நாய்க்குட்டியின் கண்முன்னே 4 நாய்க்குட்டிகளை சிலர் உயிருடன் எரித்துள்ள கொடூரம் மிக்க செயல் அரங்கேறியுள்ளது. 

 

கடைசிவரை அந்த நாய்க்குட்டிகளை காப்பாற்ற முயன்ற அந்த தாய் நாய், தீயில் கருகிய தனது நாய்க்குட்டிகளின் அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்துள்ளது. 

 

இதனைக் கண்ட சிலர் பீப்பிள்ஸ் ஃபார் அனிமல்ஸ் என்கிற விலங்குகள் நல அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் வருவதற்குள் பரிதாபமாக 3 நாய்கள் உயிரிழந்துள்ளன. எஞ்சிய 4வது நாய்க்குட்டியை காப்பாற்றி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போதே உயிரிழந்தது. 

 

இதனை அடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானதை வைத்து இந்த வெறிச்செயலை மிருகத் தனமாக செய்த நபர்களை தேடி நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர். 

Tags : #IPC #HORRIFIC #PEOPLE FOR ANIMALS #CRUELTY ACT #HYDERABAD