சோகத்தில் முடிந்த விமான பயணம்...11 மாத குழந்தை இறந்த பரிதாபம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 27, 2018 11:13 AM
11-month-old boy died after getting off a flight from Qatar to India

கத்தார்(Qatar) ஏர்வேஸ் விமானாத்தில் பெற்றோர்களுடன் பயணித்த 11 மாத குழந்தை இறந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தோஹாவில்(Doha) இருந்து ஹைதரபாதிற்கு கத்தார் ஏர்வேஸ் விமானத்தில், ஒரு தம்பதியர் தனது 11 மாத குழந்தை அர்னாவ் ஷர்மா உடன் பயணித்து கொண்டிருந்தார்கள்.இந்நிலையில் பயணத்தின் போது அர்னாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனை அடுத்து, விமானத்திலேயே குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

 

இந்நிலையில் ஹைதராபாத்தில் விமானம் தரையிறங்கியவுடன் குழந்தையை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட குழந்தையின் பெற்றோர் கதறி அழுதார்கள்.இது மற்ற பயணிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #FLIGHT #HYDERABAD #QATAR AIRWAYS