சாதிமாறி திருமணம் செய்த தம்பதியர்க்கு பட்டப்பகலில் அறிவாள் வெட்டு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 19, 2018 06:10 PM
Another honour killing in Hyderabad inter caste wedding

தெலுங்கானாவின் நால்கொண்டா பகுதியில் அம்ருதாவின் கணவர் பிரனய் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட ரத்தச் சுவடு கூட இன்னும் மறையாத நிலையில், அடுத்த ஆணவக்கொலை மற்றும் கவுரவக் கொலை முயற்சி ஹைதராபாத்தில் மிகவும் கொடூரமான முறையில் இன்று அரங்கேறி நாடு முழுவதும் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

ஹைதராபாத்தின் தெற்கு வணிகப்பகுதியில் வளர்ந்து வரும் ஏரியா எர்ராகடா. இங்கு ஒரு கடைத்தெரு வாசலில் பைக்கில் அமர்ந்தபடி இருக்கும் 24 வயதான நவ்தீப் மற்றும் அவர் சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்துகொண்ட, அதே வயதுடைய மாதவி இருவரும் புறப்பட தயாராக இருந்த வேளை அது. அந்த பரபரப்பான கடை வீதியில் ஹெல்மெட்டுடன் மாதவியின் தந்தை பைக்கில் வந்து தம்பதியர்க்கு அருகில் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி ஹெல்மெட்டை கழட்டிவிட்டு, தன் பேகில் இருந்த அறிவாளை எடுத்து, கவனிப்பின்றி இருந்த நவ்தீப் மற்றும் மாதவி இருவரையும் சரமாரியாக வெட்டுகிறார்.

 

கொடூரமாக அவர் தாக்குவதை பார்த்துவிட்டு, அருகில் ஓட முயற்சித்த ஒரே ஒரு நபரையும், மாதவியின் தந்தை அறிவாளை காட்டி மிரட்ட, அவர் நின்றுவிடுகிறார். பட்ட பகலில் நடந்த இந்த ஆணவக்கொலை மற்றும் கவுரவக் கொலை முயற்சி சம்பவம் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியதை அடுத்து இணையம் முழுவதும் பலரால் பகிரப்பட்டும் வருகிறது. வெட்டுபட்ட தம்பதியர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

 

Tags : #PRANAYMURDERCASE #PRANAYAMRUTHA #HONOURKILLING #TELANGANA #ERRAGADDA #HYDERABAD #NALGONDA #HYDERABADSHOCKER