'மிதமிஞ்சிய போதை'.. முழுக்கோழியை உயிருடன் சாப்பிட்ட வாலிபர்!

Home > News Shots > தமிழ்

By |
Drunk man from Telangana eats chicken live video goes viral

மிதமிஞ்சிய போதையில் உயிருடன் முழுக்கோழியை வாலிபர் சாப்பிடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

தெலுங்கானா மாநிலம் முகாபுபாபாத் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவர், வீட்டில் சமைத்து சாப்பிடுவதற்காக முழுக்கோழியை உயிருடன் வாங்கி சென்றுள்ளனர்.

 

நல்ல குடிபோதையில் ரோட்டில் தள்ளாடியபடி சென்ற இருவரும் ஒருகட்டத்தில் நடக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்துவிட்டனர். அதில் ஒரு வாலிபருக்கு பசியெடுக்க வாங்கி சென்ற கோழியை, இறகுகளைப் பிய்த்து உயிருடன் சாப்பிட ஆரம்பித்து விட்டார்.

 

இதனை ரோட்டில் சென்ற சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பர்த்த பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், விலங்கை கொடூரமாகக் கொல்லுதல்  மற்றும் பொதுமக்களிடையே உள்ள ஒழுக்கமற்ற நடத்தை என்ற பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

 

Tags : #TELANGANA