"இது சச்சின் ஸ்டைல் தீபாவளி":கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு சச்சின் வைத்த வித்தியாசமான டெஸ்ட்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 09, 2018 07:45 PM
Sachin celebrates his diwali with Brett Lee And Jonty Rhodes

இந்தியாவின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமான முறையில் தீபாவளி கொண்டாடினார்.சச்சினின் நெருங்கிய நண்பர்களான ஆஸ்திரேலியாவின் ப்ரெட் லீ மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் ஆகியோருடன் தனது தீபாவளியை கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

மேலும் சச்சின் அவர்களுக்கு வைத்த வித்தியாசமான டெஸ்ட் மிகவும் சுவாரசியமான ஒன்றாகவும் அமைந்துள்ளது.சச்சின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் 'அவர்கள் மூவரும் பலவிதமான இனிப்பு வைகைகளை கண்களை மூடிக்கொண்டு சுவைத்து, அது என்ன இனிப்பு வகை என்று சொல்லவேண்டும்' என்ற வகையில் அமைந்துள்ளது.ப்ரெட் லீ மற்றும் ஜான்டி ரோட்ஸ் ஆகிய இருவரும் விறுவிறுப்பாக இனிப்புகளை சுவைத்து அது என்ன இனிப்புகள் என்று ஆர்வமுடன் கூறினார்கள்.

 

மேலும்  '' தீபாவளி என்பது மகிழ்ச்சியும், இனிப்புகளாலும் நிறைந்தது. நானும் ப்ரெட் லீ மற்றும் ஜான்டி இணைந்து இனிப்புகளை பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.அனைவரும் மகிழ்ச்சியுடனும்,பாதுகாப்பாகவும் தீபாவளியை கொண்டாடுங்கள் என சச்சின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags : #CRICKET #SACHIN TENDULKAR #BRETT LEE #JONTY RHODES #INDIAN SWEETS