பூஜையுடன் தொடங்கிய 'தளபதி 63'.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 14, 2018 12:07 PM
Thalapathy 63 officially launched today

விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 63' பூஜையுடன் இன்று காலை தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சர்கார் படத்துக்குப்பின் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். விஜய்-அட்லீ 3-வது முறையாக இணையும் இப்படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறது. தெறி, மெர்சல் படங்களுக்குப் பின் மீண்டும் விஜய்யுடன், அட்லீ இணைவதால் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

 

இந்தநிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஈஓ அர்ச்சனா கல்பாத்தி இன்று காலை தனது இன்ஸ்டா பக்கத்தில், பூஜிக்கப்பட்ட வேல் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு,'' இந்த தருணம் விலைமதிப்பற்றது,'' என தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து நாம் விசாரித்தபோது இது 'தளபதி 63' படத்தின் பூஜை தான் என, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

 

தளபதி 63 படத்தின் பிரீ-புரோடக்ஷன் பணிகள் முடிந்து ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், அடுத்த தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

தற்போது தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தளபதி 63 குறித்த தங்களது மகிழ்ச்சியினை  பகிர்ந்து வருகின்றனர். இதனால் #Thalapathy63 ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

 

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தளபதி பேன்ஸ் நவ்- ஐ ஆம் வெயிட்டிங்...

Tags : #VIJAY #THALAPATHY63