மிக்ஸி, கிரைண்டருடன் 'கேக்' வெட்டிக் கொண்டாடிய சர்கார்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 12, 2018 03:07 PM
Sarkar Movie team celebrates success meet

மிக்ஸி,கிரைண்டருடன் சர்கார் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் சர்கார் படக்குழுவினர் இந்த வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

 

இதுதொடர்பான புகைப்படங்களை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். சிறு வடிவிலான மிக்ஸி, கிரைண்டர் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த இந்த கேக்கில், மெழுகுவர்த்தியை ஏற்றுவது போல ஒரு ஜோடி கைகளின் புகைப்படத்தை ரஹ்மான் வெளியிட்டு    'Whose hand is this ?' என கேட்டிருந்தார்.

 

அதற்கு தளபதி என ரசிகர்கள் பதிலளித்து இருந்தனர். இதுதவிர விஜய், ஏ.ஆர்.முருகதாஸ்,வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ், பாடலாசிரியர் விவேக் ஆகியோருடன் ஏ.ஆர்.ரஹ்மான் நிற்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.