'சர்கார்' பட பேனர்களை கிழித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது-ரஜினி

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 13, 2018 01:51 PM
Rajini\'s latest statement on Sarkar controversy

தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இதன் வெற்றி விழாவை படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.

 

முன்னதாக தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த சர்கார் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் ஒருசில இடங்களில் காட்சிகளை ரத்து செய்யும் சூழ்நிலை உருவானது.

 

இந்தநிலையில் சர்கார் பட பேனர்களை கிழித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என, சூப்பர்ஸ்டார் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.

 

இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் சர்கார் விவகாரம் குறித்து ரஜினி பேசுகையில்,''சர்கார் பட பேனர்களை கிழித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசின் இலவச திட்டங்கள் தேவையானது தான். ஓட்டுக்காக இலவசம் கூடாது,'' என்றார்.

 

Tags : #VIJAY #RAJINIKANTH #SARKAR