தயார் நிலையில் ஜிசாட்-29: ‘செக்’ வைக்கும் கஜா புயல்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 13, 2018 01:39 PM
India to launch GSAT29 communication satellite

கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 760 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாகைக்கு கிழக்கே - வடக்கே 850 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

 

இந்த கஜா புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் ஒரு வேளை கஜா புயல் திசைமாறினால் நாளை ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்படும்; புயல் திசை மாறாவிட்டால் திட்டமிட்டபடி நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். 

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் தயாரித்து விண்ணில் ஏவ திட்டமிட்டது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவுவுள்ள நிலையில்தான் இஸ்ரோ தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

Tags : #GSAT29 #GSLVMKIII #ISRO #INDIA #ROCKET #GAJACYCLONE #KAJACYCLONE #TAMILNADU #ANDRAPRADESH