தேனி: நியூட்ரினோவுக்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 02, 2018 12:00 PM
National green tribunal bannes neutrino plants in Theni

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் போலவே நியூட்ரினோ திட்டத்தை தேனி மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. முன்னதாக தேனி மாவட்டத்தில் குரங்கணியில் நிகழ்ந்த தீவிபத்து கூட, இத்திட்டத்துடன் தொடர்பு படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

ஆனால் சுற்றுச் சூழல் பாதிப்புகளையும் இயற்கை சார்ந்து பேசிவரும் பூவுலகின் நண்பர்கள் என்கிற குழுவினர் தமிழ்நாட்டில் பலராலும் பரவலாக அறியப்படுபவர்கள். பேஸ்புக் மூலம் இவை பற்றிய விழிப்புணர்வுகளை உருவாக்கி வந்த இவர்கள், பின்னர் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தனர். 

 

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தடை விதித்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

Tags : #THENI #TAMILNADU #POOVULAGINNANBARGAL #NEUTRINO