விடாமல் துரத்தும் புலி.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 13, 2018 12:45 PM
tiger chasing a tourist vehicle inside the Tiger Reserve Viral Video

மகாராஷ்டிராவின் தடோபா அந்தரி புலிகள் சரணாலயத்துக்குள், டிரெக்கிங் சென்றுள்ள பயணிகளை கண்ட புலி ஒன்று அவர்களை விடாமல் துரத்தி வந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள சந்திரபூரில் இருக்கும் வனப்பகுதிக்குள் மூன்று பேர் கொண்ட மாருதி ஜிப்ஸியில் செல்லும் பயணிகளை தூரத்தில் இருந்து, காணும் புலி உடனடியாக அவர்களை துரத்தி ஓடத் தொடங்குகிறது. 

 

இந்த 19 விநாடிகள் பயணிகளை விடாமல் துரத்திக்கொண்டு சென்று புலியிடம் இருந்து வெகுவேகமாக தப்பிக்க முயன்று ஜிப்ஸியை இயக்கிய காட்சிகள் திக்திக் என்றிருப்பதாலேயே இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

முன்னதாக மகாராஷ்டிர  மாநிலத்துக்குட்பட்ட இன்னொரு மாவட்டத்தில் ஏறத்தாழ 13 மனிதர்களை கொன்றதாக கூறப்பட்ட புலி ஒன்றை, அரசு காவல் படையினர் சுட்டுக் கொன்றதாக வந்த தகவலை வனத்துறையினர் கடுமையாக கண்டித்துள்ளனர். 

Tags : #VIRAL #VIDEO #MAHARASHTRA #TIGER #TIGRESS